தெற்கு குஜராத்தை புரட்டிபோட்ட கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்தில் பயணித்தவர்களை கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்!


தெற்கு குஜராத்தை புரட்டிபோட்ட கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்தில் பயணித்தவர்களை கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்!
x

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு பாகிஸ்தான் முழுவதும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் தொடர்புடைய சூறாவளி சுழற்சி காரணமாக, தென்மேற்கு பருவமழை தற்போது குஜராத் மாநிலம் முழுவதும் தீவிரமாக உள்ளது.

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் அடுத்த நான்கு நாட்களில் மேலும் தீவிரமாக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 11 அன்று, கட்ச் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தினுள் இருந்தவர்களை அப்ப்குதி மக்கள் கடும் சிரமத்திற்கு பின் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.

கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் மஸ்கா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சவுராஷ்டிரா பகுதியில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கண்டோர்னா, உப்லேடா, லோதிகா ஆகிய இடங்களில் முறையே 114 மி.மீ., 107 மி.மீ., 92 மி.மீ., மழை பெய்துள்ளது.



Next Story