15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது நபர் - அதிர்ச்சி சம்பவம்


15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது நபர் - அதிர்ச்சி சம்பவம்
x

15 வயது சிறுமியிடம் தனது பெயரை மாற்றி கூறி அந்த நபர் பழகியுள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராமில் ராஜேந்திர நகரில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபயணம் மேற்கொண்டபோது 15 வயது சிறுமிக்கு முகமது ஷதாப் (வயது 33) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகமது ஷதாப் தனது பெயரை அர்மென் என்று மாற்றி கூறி அந்த சிறுமியிடன் பழகியுள்ளார். நாளடைவில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர்.

இதனிடையே, திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 26-ம் தேதி முகமது ஷதாப் சிறுமியை போபால் நகருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுமியை முகமது பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 28-ம் தேதி போபாலில் முகமதுவை போலீசார் கைது செய்தனர். போபால் ரெயில் நிலையத்தில் வைத்து முகமதுவை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் முகமது ஷதாப் தன் பெயரை அர்மென் என மாற்றி சிறுமியிடம் பழகி பின்னர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமது சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story