அதிரப்பள்ளி அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியானது சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கக் கூடிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்நிலையில் தற்போது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், பெரிங்கல்குத்து அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story