ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி கோர்ட்டில் ஜூலை 21-ந்தேதி தீர்ப்பு


ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி கோர்ட்டில் ஜூலை 21-ந்தேதி தீர்ப்பு
x

வாரணாசி கோர்ட்டில் ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வரும் 21-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் வாரணாசி சிவில் கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனிடையே இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் என்பவர் வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிதிமன்றம், இது தொடர்பாக ஞானவாபி மசூதி நிர்வாகத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூலை 21-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story