கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு: 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பத்மஸ்ரீ விருது வென்ற டாக்டர் பேட்டி


கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு:  20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பத்மஸ்ரீ விருது வென்ற டாக்டர் பேட்டி
x

மத்திய பிரதேசத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கி தற்போது 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் எம்.சி. தவார் பத்மஸ்ரீ விருது பெற்றதற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.



ஜபல்பூர்,


நாட்டின் 74-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் டாக்டர் எம்.சி. தவார் (வயது 77) என்பவரும் இடம் பெற்று உள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் அவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். விருது வென்றது பற்றி டாக்டர் தவார் கூறும்போது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. அதற்கு காலதாமதம் ஏற்படலாம். அதற்கான பலனே இந்த விருது. தவிரவும், மக்களின் ஆசியும் அதில் அடங்கும்.

குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை பற்றி அவர் கூறும்போது, வீட்டில் நிச்சயம் விவாதம் நடைபெறும். ஏன் இவ்வளவு குறைந்த கட்டணம் பெறுகிறீர்கள் என்று? ஆனால், மக்களுக்கு சேவையாற்றுவதே ஒரே நோக்கம். அதனால், கட்டணம் உயர்த்தப்படவில்லை.

வெற்றியின் அடிப்படை மந்திரம், பொறுமையுடன் நீங்கள் உழைத்தீர்கள் என்றால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றி மதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

1946-ம் ஆண்டில் தற்போதுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப்பில் பிறந்த அவர், சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவிற்கு குடிபெயர்ந்து உள்ளார்.

1967-ம் ஆண்டில் ஜபல்பூரில் மருத்துவம் தேர்ச்சி பெற்ற அவர், இந்தியா, பாகிஸ்தான் போரின்போது, இந்திய ராணுவத்தில் ஓராண்டாக பணியாற்றி உள்ளார்.

அதன்பின்பு, 1972-ம் ஆண்டு முதல் ஜபல்பூரில் மக்களுக்கு ரூ.2 என்ற கட்டணத்தில் சுகாதார சேவையை வழங்க தொடங்கினார். தற்போது அவர் ரூ.20 கட்டணம் பெற்று கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார்.


Next Story