இளம்பெண் ஆணவக்கொலை; 3 சகோதரர்களுக்கு தூக்கு; உத்தரகாண்ட் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


இளம்பெண் ஆணவக்கொலை; 3 சகோதரர்களுக்கு தூக்கு; உத்தரகாண்ட் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

4 ஆண்டுகள் நடந்த விசாரணை முடிவில் சகோதரர்கள் 3 பேருக்கும் தற்போது தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர், பிரீதி. இளம்பெண்ணான இவர் தனது குடும்பத்தினரை எதிர்த்து பிராஜ்மோகன் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உடன்பிறந்த சகோதரர்கள் இருவரும், பெரியப்பா மகன் ஒருவரும் சேர்ந்து பிராஜ்மோகனை கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்தனர்.

உத்தரகாண்டில் பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தி இருந்த இந்த ஆணவக்கொலை வழக்கு ஹரித்வார் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

4 ஆண்டுகள் நடந்த விசாரணை முடிவில் சகோதரர்கள் 3 பேருக்கும் தற்போது தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேரும் சிைறயில் அடைக்கப்பட்டனர்.

ஆணவக்கொலை வழக்கில் சகோதரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story