பா.ஜனதா மந்திரிகள் குறித்து ஹரிபிரசாத் பேசவில்லை


பா.ஜனதா மந்திரிகள் குறித்து ஹரிபிரசாத் பேசவில்லை
x

பா.ஜனதா மந்திரிகள் குறித்து ஹரிபிரசாத் பேசவில்லை, சித்தராமையாவை தான் அவர் மறைமுகமாக சாடியுள்ளார் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

பெங்களூரு:-

டெல்லியில் நேற்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்துள்ள மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக ஹரிபிரசாத் பேசி உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூல காங்கிரசார் 50 சதவீதம் பேர் தான் உள்ளனர். மீதி 50 சதவீதம் பேர் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சித்தராமையா கூட ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர். அவர் காங்கிரசுக்கு வந்த பின்பு முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார். சித்தராமையா மூல காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இல்லை.

அதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளை கூறுவது போல், சித்தராமையாவை மறைமுகமாக ஹரிபிரசாத் கூறியுள்ளார். சித்தராமையாவை நேரடியாக திட்டுவதற்கு ஹரிபிரசாத்தால் முடியாது. ஏனெனில் அவர் பா.ஜனதாவை குறி வைத்து அவ்வாறு பேசியது தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பற்றியே ஹரிபிரசாத் பேசி இருக்கிறார். இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.


Next Story