சமூகவலைதளம் மூலம் பழகிய பெண் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுகிறார் - ஆண் நபர் புகார்


சமூகவலைதளம் மூலம் பழகிய பெண் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுகிறார் - ஆண் நபர் புகார்
x

சமூகவலைதளம் மூலம் பழகிய பெண் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக ஆண் நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த நபர் இன்று செக்டார் 27 போலீசில் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, கர்னல் பகுதியில் உள்ள ராஜீவ் நகரில் வாடகை வீட்டில் நான் வசித்து வந்தேன். எனக்கு சமூகவலைதளம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண்ணுடன் இணைந்த கடந்த சில நாட்களுக்கு முன் ஓட்டலுக்கு சென்றேன். அங்கு இருவரும் மது குடித்தோம். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்த அந்த பெண்ணின் கூட்டாளிகள் என்னை கடுமையாக தாக்கினர்.

பின்னர் அந்த பெண் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், இதை வீடியோவாக எடுத்து மிரட்டினர். பின்னர் அந்த ஓட்டலில் தன்னை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும் எப்படியோ ஓட்டலில் இருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும் போலீசில் அந்த ஆண் நபர் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story