73 வயது பாட்டி செய்த சேட்டை....40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் டைவ் அடித்து அசத்தல்...!


73 வயது பாட்டி செய்த சேட்டை....40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் டைவ் அடித்து அசத்தல்...!
x

courtesy imagesNDTV

தினத்தந்தி 1 July 2022 12:01 PM IST (Updated: 1 July 2022 12:13 PM IST)
t-max-icont-min-icon

73 வயது பாட்டி ஒருவர் கங்கைநதியில் டைவ் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்திலிருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் கங்கைநதியில் டைவ் அடிக்கும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசோக் பசோயா என்ற நபர் அவரது டுவிட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கைநதியில் 73 வயதான பாட்டி (ஓம்வதி), ஒருவர் எந்தவித பயமின்றி குதிக்கிறார். பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்துக் கொண்டு கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் அதைப் பார்த்து, கத்திக் கூச்சலிட்டு, ஆரவாரம் செய்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த வீடியோவுக்கு, ``பாட்டிக்கு தில் அதிகம் தான் பா!" என கமென்ட் செய்து அவரைப் பாராட்டி வருகின்றனர் சமூக தளவாசிகள்.

இது குறித்து அந்த பாட்டி கூறியதாவது:-

தான் சிறுவயதிலிருந்தே நதிகளில் நீந்து வதால் யாரும் என்னை பின் தொடருவதில்லை. தன்னை பற்றி யாரும் கவலைப்படமாட்டர்கள் என்றார் புன்னகையுடன்,

நீர்வரத்து அதிகமாக இருந்தபோதிலும், உதவியின்றி நதியின் கரையை அவர் பத்திரமாக அடைந்தார் அவர் ஒரு அற்புதமான நீச்சல் வீராங்கனை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story