பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளாரா?; முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி


பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளாரா?; முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம் என்றும், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளாரா? என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் 5 இலவச திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, 5 இலவச திட்டங்களையும் அரசு நிறைவேற்றி உள்ளது. அதே நேரத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதிலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவதிலும் இன்னும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் கட்சி பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்திருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

மேலும் அனைவருக்கும் இலவச மின்சாரம், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், முதல்-மந்திரியான பின்பு முதல் முறையாக தனது சொந்த ஊரான மைசூருவுக்கு சித்தராமையா பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக பா.ஜனதா தலைவர்களின் குற்றச்சாட்டு குறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மோடி நிறைவேற்றி உள்ளாரா?

காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கொடுத்த 5 உத்தரவாதங்களையும் அமல்படுத்தி இருக்கிறது. 5 இலவச திட்டங்களையும் அமல்படுத்தி இருக்கிறோம். நாங்கள் சொன்னபடி நடந்துள்ளோம். அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டத்தை நாளை (அதாவது இன்று) தொடங்கி வைக்க உள்ளேன். கிரகஜோதி, கிரகலட்சுமி திட்டங்களில் இருந்த சில குழப்பம் சரி செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டங்களை அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அளித்த எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதுபற்றி விவாதிக்கப்படுகிறதா? மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியிக்கு வருவதற்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளாரா?. அதுபற்றி எதற்காக விவாதிக்கவோ, பேசுவதோ இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். என்னுடைய சொந்த ஊருக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து, தொண்டர்களுடன் சேர்ந்து சாப்பிட உள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Related Tags :
Next Story