'நான் குற்றவாளி என்று எந்த குற்றவாளி ஒப்புக்கொள்வார்? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி

Image Courtacy : PTI
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான, காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'நான் குற்றவாளி என்று எந்த ஒரு குற்றவாளியும் ஒப்புக்கொண்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், தண்டனை அனுபவிக்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அதை ரத்து செய்ய கோர்ட்டை அணுக வேண்டும். ஆனால் ஜாமீன் கோரினர். இதன் மூலம் அவர்கள் குற்றவாளிகள் என்றுதான் அர்த்தம்' என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story






