தூய்மை பணியாளர்களை இதயப்பூர்வமாக வணங்குகிறேன்; சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் பெருமிதம்


தூய்மை பணியாளர்களை இதயப்பூர்வமாக வணங்குகிறேன்;  சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் பெருமிதம்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 23 Sep 2022 7:31 PM GMT)

தூய்மை பணியாளர்களை இதயப்பூர்வமாக வணங்குகிறேன் என்று சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

தூய்மை பணியாளர்கள் தினம்

சிக்கமகளூரு டவுன் குவெம்பு கலையரங்கத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், கலெக்டர் ரமேஷ் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக காலை 9 மணிக்கு பசவனஹள்ளியில் இருந்து தூய்மை பணியாளர்கள் அம்பேத்கர் படத்துடன் வாகனத்தில் எம்.ஜி.ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-

இதயப்பூர்வமாக வணங்குகிறேன்

நகர் தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்கள் தான் காரணம். அவர்கள் இல்லை என்றால் நகர் தூய்மையாக இருக்க முடியாது. தூய்மை பணியாளர்களை நான் இதயப்பூர்வமாக வணங்குகிறேன். அவர்களின் பணியை நம் எக்காரணம் கொண்டும் மறக்கக்கூடாது. கொரோனா பேரிடர் காலத்திலும் தூய்மை பணியாளர்கள் வெளியில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி நகரை தூய்மைப்படுத்தினர்.

அவர்களும் கொரோனா போர்வீரர்கள் என அழைத்து அரசு கவுரவப்படுத்தியது. தூய்மை பணியாளர்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு முன்வந்துள்ளது.மாநிலத்தில் சிக்கமகளூருவை தூய்மையான நகா் என்ற பெயர் எடுக்க வைக்க தூய்மை பணியாளர்கள் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் நகரசபை தலைவர் வேணுகோபால், நகரசபை கமிஷனர் பசவராஜ், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story