கொட்டும் மழையில் பள்ளியில் இருந்து மகளை தோளில் சுமந்து செல்லும் தாய் - வைரல் வீடியோ
கொட்டும் மழையில் பள்ளியில் இருந்து மகளை தாய் தோளில் சுமந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி,
தாயின் அன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த வகையில் பள்ளி முடிந்து தனது மகளை கொட்டும் மழையில் தனது தோளில் சுமந்து செல்லும் தாயின் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குல்சர் ஷஹப் என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தி பகிர்ந்த வீடியோவில், ஒருகையில் குடையை பிடித்தவாறு கொட்டும் மழையில் பள்ளிச்சீருடையில் உள்ள தனது மகளை தாய் தன் தோளில் சுமந்தவாறு சிரிந்து பேசி மகிழ்ந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சி எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story