விவசாயிகள் போராட்டத்துக்கு அழைப்பு: டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு


விவசாயிகள் போராட்டத்துக்கு அழைப்பு: டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
x

கோப்புப்படம்

விவசாயிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்து இருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லி எல்லைகளில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டெல்லி எல்லைகளில் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நேராமல் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story