மும்பையில் ரூ.1,725கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
மும்பையில் ரூ.1,725கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்தனர்.
மும்பை,
நவிமும்பையில் நவசேவா துறைமுகம் உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் போதை பொருள்கள் கன்டெய்னரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் கப்பலில் இருந்து வந்து இறங்கிய கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஒரு கன்டெய்னரில் 22,000 (22 டன்) கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ1,725 கோடி என கூறப்படுகிறது. கண்டெய்னரில் கடத்தப்படவிருந்த ஹெராயினை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெராயின் கடத்தலை கண்டுபிடிக்காமல் இருக்க அதிமதுர குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.