"ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்" - அசாதுதீன் ஓவைசி


ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார் - அசாதுதீன் ஓவைசி
x

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான செயல்திட்டம் என்று ஓவைசி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்று உள்ளார். அப்போது பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.

கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அசாதுதீன் ஒவைசி, "ஹலால் இறைச்சியால் தங்களுக்கு ஆபத்து, முஸ்லீம்களின் தாடியால் ஆபத்து, தொப்பியால் ஆபத்து, முஸ்லீம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து என்று அவர்கள்(பாஜக) கருதுகின்றனர்.பாஜக முஸ்லிம் அடையாளத்துக்கு எதிரானது.

'அனைவருக்கும் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரது நம்பிக்கை' என்று பிரதமர் கூறும் வார்த்தைகள் வெற்றுப் பேச்சு. இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான செயல்திட்டம். ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார்" என்று ஒவைசி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story