உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல்


உல்லாசமாக இருந்த வீடியோவை   வெளியிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல்
x

உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு பாகலூர் பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் எலகங்கா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உல்லாசமாக இருந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வந்தது. சிறிது நேரத்தில் பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய இன்னொரு பெண், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உஷா என்ற பெண்ணையும், அவரது நண்பர் சுரேஷ் என்பவரையும் கைது செய்தனர். விசாரணையில் பெண்ணும், கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்த அறையில் ரகசிய கேமராவை 2 பேரும் பொருத்தியது தெரியவந்து உள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story