இமாச்சலபிரதேசம்: அக்னிவீரர்களுக்கு வேலை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
அக்னிபத் திட்டத்தின் கீழ், சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர்களுக்கு அதன்பின்னர் வேலைவாய்ப்பு கிடைப்பதை, அரசு உறுதி செய்யும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
சிம்லா,
இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் இன்று மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ள, அக்னிபத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முடிவில், அக்னிபத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர்களுக்கு அதன்பின்னர் வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதை, மாநில அரசு உறுதி செய்யும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story