அஜ்மீரில் உள்ள மசூதி முன்பு கோயில் இருந்த இடம் - உரிமை கோரும் இந்து அமைப்பினர்


அஜ்மீரில் உள்ள மசூதி முன்பு கோயில் இருந்த இடம் - உரிமை கோரும் இந்து அமைப்பினர்
x

அஜ்மீரில் உள்ள மசூதி முன்பு கோயில் இருந்த இடம் என்று இந்து அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.

ஜெய்ப்பூா்,

அஜ்மீரில் உள்ள சூஃபி துறவி குவாஜா மொய்னுதீன் சிஷ்டி மசுதி ஒரு காலத்தில் கோயிலாக இருந்ததாகவும், அதனை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என மகாராணா பிரதாப் சேனா என்ற அமைப்பை சேர்ந்த ராஜ்வர்தன் சிங் பர்மர் என்பவா் கூறியுள்ளனா்.

மேலும்,மசூதியின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் இந்துமத சின்னங்கள் இருப்பதாகவும் அவா் கூறினார். இதற்கு இஸ்ஸாமிய அமைப்புகள் மறுப்பு தொிவித்தனா்.

இதுகுறித்து இஸ்ஸாமிய அமைப்பின் தலைவா் மொயின் சிஸ்டி தொிவிக்கையில்,சுமாா் 850 ஆண்டு பழமையானது இந்த மசூதி. இந்த மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இங்கு இந்துமதச் சின்னங்கள் எங்கும் இல்லை என்பதை சொல்கிறேன். தற்போது நாட்டில் ஒரு புது விதமான சூழல் நிலவுகிறது.

குவாஜா மொய்னுதின் சிஷ்டி மசூதி குறித்து கேள்வி எழுப்புவது, மத வேறுபாடின்றி அங்கு வழிபாடு நடத்திவரும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். இதுபோன்ற பிரச்சனைகளில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்று அவா் கூறினார்.


Next Story