மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் கற்பிக்கப்படும் - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் கற்பிக்கப்படும் - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
x

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்கள் கற்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் இந்து சமய நூல்களான கீதை, ராமசரிதமானஸ் மற்றும் வேதங்கள் ஆகியவை கற்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-

ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை என எதுவாக இருந்தாலும், அவை நமது விலைமதிப்பற்ற புத்தகங்கள். இந்த நூல்கள் ஒரு மனிதனை ஒழுக்கமாகவும், முழுமையானதாகவும் மாற்றும் திறன் கொண்டவை.

முதல்வராக நான் சொல்கிறேன், நம்முடைய மத புத்தகங்களை அரசு பள்ளிகளில் கற்பிப்போம். பகவத் கீதை, ராமாயணம், ராமசரிதமானஸ், மகாபாரதத்தின் சாராம்சம் ஆகியவற்றை கற்பிப்போம். மற்ற பாடங்களுடன், இந்த மத புத்தகங்களும் அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும்.

ராமரை ஏன் கற்பிக்கக்கூடாது? துளசிதாஸ் இவ்வளவு பெரிய புத்தகத்தை (ராமசரிதமானஸ்) எழுதியுள்ளார். இத்தகைய புத்தகம் எங்கே கிடைக்கும்? நம்முடைய பெரிய மனிதர்களை அவமதிக்கும் இதுபோன்றவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது. மத்திய பிரதேசத்தில் நமது புனித நூல்களை கற்பிப்பதன் மூலம், நமது குழந்தைகளின் ஒழுக்கத்தை முழுமையாக்குவோம்.

நமது ஒவ்வொரு மூச்சிலும் ராமர் இருக்கிறார். ராமர் இல்லாமல் இந்த நாடு ஒன்றுமில்லை. ராமர் நம் இருப்பு. ராமர் நம் உயிர், ராமர் நம் கடவுள், ராமர்தான் இந்தியாவுக்கு அடையாளம் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story