இந்துக்கள் முஸ்லீம்களைப்போல் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் - பத்ருதீன் அஜ்மல்


இந்துக்கள் முஸ்லீம்களைப்போல் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் - பத்ருதீன் அஜ்மல்
x

இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்ருதீன் அஜ்மல் கூறி உள்ளார்.

கரீம்கஞ்ச்(அசாம்)

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐடியூஎப்) தலைவரும், அசாம் அரசியல்வாதியுமான பத்ருதீன் அஜ்மல் புதிய சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டு உள்ளார். "இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

முஸ்லீம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள், முஸ்லீம் பெண்களும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வயதிற்கு முன்னதாக 18 வயதில் திருமணம் செய்கிறார்கள். மறுபுறம், இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.

40 வயதிற்குப் பிறகு அவர்கள் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனவே, அவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும்.

இந்துக்களும் முஸ்லீம்களின் பார்முலாவைப் பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பிறகு பாருங்கள். எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று.

இன்றைக்கு நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா இருக்கிறார். அப்படியிருக்க, அவரை தடுப்பது யார், நீங்களும் எங்கள் முஸ்லீம் பெண்களை தூக்கிச் செல்லுங்கள், அதை நாங்கள் வரவேற்போம், சண்டையிட மாட்டோம். உங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதும் தெரியவரும் என்று கூறினார்.

ஷ்ரத்தா வால்கர் வழக்கில் முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை கவர்ந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வலதுசாரி சதி கோட்பாடு என சர்மா சமீபத்தில் கூறியிருந்தார்.


Next Story