வங்காளதேச மந்திரியுடன் அமித்ஷா சந்திப்பு..!!


வங்காளதேச மந்திரியுடன் அமித்ஷா சந்திப்பு..!!
x

வங்காளதேச மந்திரியை அமித்ஷா சந்தித்து கோவில்கள் மீதான தாக்குதல் பிரச்சினையை எழுப்பினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று தொடங்கிய பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்க வங்காளதேச உள்துறை மந்திரி அசாதுசமான் கான், டெல்லி வந்துள்ளார். மாநாட்டுக்கு இடையே அவரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்தார். எல்லைப்புற மேலாண்மை, பொதுவான பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதும், கோவில்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த பிரச்சினையை வங்காளதேச மந்திரியிடம் அமித்ஷா எழுப்பினார்.


Next Story