5 உலக சாதனை படைத்து உள்ளது மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு


5 உலக சாதனை படைத்து உள்ளது  மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு
x

மத்திய நெடுஞ்சாலை துறை நடப்பாண்டில் 5 உலக சாதனை படைத்து உள்ளதாக நிதின் கட்காரி கூறியுள்ளார்.

புனே

புனேயில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இந்த ஆண்டு 5 உலக சாதனைகளை படைத்து உள்ளது. இதில் அமராவதி - அகோலா இடையே 75 கி.மீ. தூரத்திற்கு 105 மணி 33 நிமிடங்களில் காங்கிரீட் சாலை போடப்பட்டுள்ளதும் ஒன்று. இந்த சாதனை என்னை சேராது. இதற்காக உழைத்த என்ஜினீயர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள், தொழிலாளர்கள் தான் சாதனைக்கு காரணம்.

18-வது நூற்றாண்டு முகலாயர்களுக்கும், 19-வது நூற்றாண்டு யுனின் ஜாக்கிற்குமானதாக இருந்தது. 20-வது நூற்றாண்டில் அமெரிக்கா அதிக அதிகாரம் பெற்ற நாடாக இருந்தது. நாம் இணைந்து உழைத்தால் 21-வது நூற்றாண்டு இந்தியாவுக்கானதாக இருக்கும். நாடு விஸ்வகுருவாக மாறும். பொருளாதாரத்தில் சூப்பர்பவர் நாடாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story