2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையில்லை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையில்லை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

அரசு ஊழியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை உள்ளது.

சிம்லா

அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியரின் 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமையில்லை என ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விவரம் பின்வருமாறு;

இமாச்சலபிரதேச காவல்துறையில் 1983 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் பஹொலா ராம். இவர் கடந்த 2002-ம் ஆண்டு உயிரிழந்தார். பஹொலா ராமிற்கு ராம்கு தேவி மற்றும் துர்கி தேவி என 2 மனைவிகள் உள்ளனர். குடும்ப ஓய்வூதியத்திற்கு பஹொரா ராம் தனது 2-வது மனைவி துர்கி தேவியின் பெயரையும் சேர்த்துள்ளார்.

அதேவேளை, பஹொலா ராம் உயிரிழந்த பின்னர் குடும்ப ஓய்வூதியம் அவரது முதல் மனைவி ராம்கு தேவி பெற்றுவந்தார். ஆனால், ராம்கு தேவி கடந்த 2015-ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து ராம்கு தேவியின் மரணத்தையடுத்து குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்கப்படவேண்டுமென பஹொலா ராமியின் 2-வது மனைவி துர்கி தேவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜொதிஸ்னா ரிவால் டுவ், முதல் மனைவி இருக்கும்போதே பஹொலா ராமி மனுதாரரை 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆகையால், 2-வது மனைவியாக குடும்ப ஓய்வூதியம் பெற மனுதாரருக்கு (துர்கி தேவி) உரிமையில்லை' என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story