சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள்: கைது செய்ய முயன்ற போலீஸ் மீது தாக்குதல்: டெல்லியில் பரபரப்பு


சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள்: கைது செய்ய முயன்ற போலீஸ் மீது தாக்குதல்: டெல்லியில் பரபரப்பு
x

தலைநகர் டெல்லியில் நேப் சராய் பகுதியில் விசா காலம் முடிந்த பிறகு நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நேப் சராய் பகுதியில் விசா காலம் முடிந்த பிறகு நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய டெல்லி போலீசார் சென்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் மொத்தமாக திரண்டு போலீசாருக்கு இடையூறு செய்தனர்.

மனித பாதுகாப்பு கேடயம் போல அரண் போல சூழ்ந்து கொண்டனர். அப்போது போலீசாரை சிலர் தாக்கவும் செய்தனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி 2 நைஜீரியர்கள் தப்பி ஓடிவிட்டனர். எனினும், விசா காலம் முடிந்து தங்கியிருந்த ஒரு நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை மீண்டும் சென்ற போலீசார் ஒரு பெண் உள்பட மேலும் 4 நைஜீரிய நாட்டவர்களை கைது செய்தனர். கைதான நைஜீரிய நாட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story