திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம்! 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம்! 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
x

இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையையொட்டி, விடுமுறை தினம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோர் ஏழுமலையானை தரிசிக்க குவிந்துள்ளதால், தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை 5 கி.மீ. தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.

மேலும், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.


Next Story