உல்லாசமாக இருந்த வீடியோவை காதலியின் கணவனுக்கு அனுப்பி வைத்த முன்னாள் காதலன்: அதிர்ச்சியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை...!


உல்லாசமாக இருந்த வீடியோவை காதலியின் கணவனுக்கு அனுப்பி வைத்த முன்னாள் காதலன்: அதிர்ச்சியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை...!
x
தினத்தந்தி 30 April 2023 12:43 PM IST (Updated: 30 April 2023 12:47 PM IST)
t-max-icont-min-icon

அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு இளைஞர் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஐதரபாத்,

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 24). இவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கும் மகேஷுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த இளம் பெண் காதலுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் எனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு இடையில் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு இளைஞர் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மிகவும் கோபம் அடைந்த மகேஷ், அந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது மனைவி காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து மகேஷ் அந்த இளம் பெண்ணை விடவில்லை. விரட்டி விரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டுமெனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளம் பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டுமென அழைத்துள்ளனர்.

அந்த இடத்திற்கு வந்த அவரிடம் இளம்பெண்ணின் பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை முற்றிப் போனதால் இளம்பெண்ணின் பெற்றோர் நடு ரோட்டிலேயே மகேஷை வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே மகேஷ் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.


Next Story