தொழிலதிபர் காதலருடன் பைக்கில் சென்ற மனைவியை விரட்டி பிடித்து அடித்து உதைத்த கணவர்-வீடியோ


தொழிலதிபர் காதலருடன் பைக்கில் சென்ற மனைவியை  விரட்டி பிடித்து அடித்து உதைத்த கணவர்-வீடியோ
x

தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ரா

உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பு இருந்து உள்ளது. அதனை கணவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிரச்சினைக்காக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை வீடு வெளியேறினார். ​​​​கணவன் தனது மகளுடன் சென்று மனைவியை தேடினார்.

ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் மனைவி அவருடைய காதலருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிப்பதை கண்டார்.

பின்னாடியே சென்ற அவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தார். பின்னர், நடுரோட்டில் மனைவியை சரமாறியாக அடித்துள்ளார். மேலும் தனது மனைவியின் காதலரை பலமுறை அறைந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஷிக்கந்த்ரா போலீசார் பெண்ணின் காதலர் மீது பொது மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.



1 More update

Next Story