ஸ்மார்ட் போனை இரவில் அதிக நேரம் பயன்படுத்தியதால் பார்வையை இழந்த இளம்பெண் - உஷார்...!


இருட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் இளம் பெண் ஒருவரின் கண் பார்வை பறிபோயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதரபாத்,

``இணையத்தால் மிச்சப்படுத்தப்பட்ட நேரத்தை இணையத்திலேயே செலவிடுகிறோம்" என்பார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் அதிலேயே ஒரு நாளின் பெரும்பங்கு நேரத்தைச் செலவிடுவது வாடிக்கையாகிவிட்டது.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்திய செல்போன்களுக்கு இன்று சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

இதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக செல்போன் அதிக நேரம் பயன்படுத்தினாலும், இருட்டில் பயன்படுத்துவதாலும் கண் பார்வை பறிபோய்விடும் என எச்சரித்துள்ளனர்.

அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் தனது வீட்டில் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இழந்த பார்வையை திரும்பவும் மீட்டெடுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 More update

Next Story