கொள்ளையடித்த வீட்டில் 'ஐ லவ் யூ' என்று எழுதிச்சென்ற திருடர்கள்..!!
கோவா மாநிலத்தில் வீடு ஒன்றில் கொள்ளையடித்த திருடர்கள், அங்கு ‘ஐ லவ் யூ’ என்று எழுதிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பனாஜி,
கோவா மாநிலம் மர்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் கொள்ளையர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்த புதுமையான கொள்ளை நடந்துள்ளது.
அந்த ஊரில் ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். 2 நாள் கழித்து அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்தார்.
ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் திருடு போயிருந்தது. அத்துடன், டி.வி. திரையில் 'ஐ லவ் யூ' என்று கொள்ளையர்கள் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்திருந்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் மர்கோவா போலீசார் கொள்ளை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story