மந்திரி சபையில் இடம்பெற எனக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம் - பங்கஜா முண்டே ஆதங்கம்

மந்திரி சபையில் இடம்பெற எனக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம் - பங்கஜா முண்டே ஆதங்கம்
x

மந்திரி சபையில் சேர்க்கப்படுவதற்கு நான் போதிய தகுதி இல்லாதவராக இருக்கலாம் என பங்கஜா முண்டே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மந்திரி சபையில் பெண்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதுபற்றி மறைந்த பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேயின் மகளும், முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டேயிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

மந்திரி சபையில் சேர்க்கப்படுவதற்கு நான் போதிய தகுதி இல்லாதவராக இருக்கலாம் என பங்கஜா முண்டே கூறியுள்ளார்.

தகுதியானவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது பெருமையை காப்பாற்றி கொண்டு நான் அரசியல் செய்ய முயற்சி செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story