"நல்ல காலம் பிறக்கும் என நம்பி ரெயிலில் பயணிகளுக்கு தீ வைத்தேன்" - கைதான நபர் அதிர்ச்சி வாக்குமூலம்
கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்ததாக கைதான ஷாருக் சைபி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயிலில் டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் மற்றும் பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார்.
இந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் ஷாருக் சைபி என்பவரை உளவுப்பிரிவு பயங்கரவாத தடுப்புப்படை பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், ரெயிலில் தீ வைத்தது குறித்து கைதான ஷாருக் சைபி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். "ரெயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என ஒருவர் அறிவுரை வழங்கினார். அதன் பேரில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்தேன். கோழிக்கோடுக்கு ரெயிலில் சென்ற போது பாதி வழியில் இறங்கி பெட்ரோல் வாங்கினேன், பெட்ரோல் வாங்கிவிட்டு அடுத்த ரயிலில் ஏறி பயணிகள் மீது தீ வைத்தேன். தீ வைத்த பின், அதே ரெயிலில் வேறு பெட்டியில் ஏறி கண்ணூர் சென்றேன். பிறகு மகாராஷ்டிரா சென்ற போது ரத்தினகிரி அருகே ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாக" போலீசில் ஷாருக் சைபி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஷாருக் சைபிக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"நல்ல காலம் பிறக்கும் என நம்பி ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்தேன்" - கைதான நபர் அதிர்ச்சி வாக்குமூலம்#keralatrainfire #trainfire https://t.co/vql3nNM4oM
— Thanthi TV (@ThanthiTV) April 6, 2023