முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து : பாஜக நிா்வாகிகளை கைது செய்ய வேண்டும் - மம்தா பானா்ஜி


முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து : பாஜக நிா்வாகிகளை கைது செய்ய வேண்டும் - மம்தா பானா்ஜி
x

முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து தொிவித்த விவகாரத்தில் பாஜக நிா்வாகிகளை கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்-மந்திாி மம்தா பானா்ஜி வலியுறுத்தி உள்ளாா்.

கொல்கத்தா,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.

பாஜகவை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியது. நுபுர் சர்மா, நவீன் ஜீண்டால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது.

அந்த வகையில், நுபுர் சர்மா, நவீன் ஜீண்டாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்காள மாநிலம் ஹவ்ரா மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டையர்களை தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்ட டுவிட்டா் பதிவில், பாஜக நிா்வாகிகளின் வெறுக்கத்தக்க பேச்சு சமூகத்தில் வன்முறை மட்டுமின்றி பிாிவினையை ஏற்படுத்த வழிவகுக்கும். எனவே அவா்களை கைது செய்ய வேண்டும். பாஜக நிா்வாகிகள் வெறுப்பு உணா்வை பரப்பும் வகையில் பேசினாலும் நாட்டின் நலன் கருதி அனைத்து மத சகோதர சகோதாிகள் அமைதி காக்க வேண்டும் என அவா் பதிவிட்டுள்ளாா்.


Next Story