வருணா தொகுதியில் என்னை எதிர்த்து சோமண்ணா போட்டியிடுவதை வரவேற்கிறேன்; சித்தராமையா பேட்டி


வருணா தொகுதியில் என்னை எதிர்த்து சோமண்ணா போட்டியிடுவதை வரவேற்கிறேன்; சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வருணா தொகுதியில் என்னை எதிர்த்து சோமண்ணா போட்டியிடுவதை வரவேற்கிறேன் என்று சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு:

பெங்களூருவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

தேர்தல் அரசியலில் இருந்து இந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இது எனது கடைசி தேர்தல் என்பதால், சொந்த ஊரான வருணாவில் போட்டியிடுகிறேன். வருணா தொகுதியில் என்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சோமண்ணா நிறுத்தப்பட்டுள்ளார். என்னை எதிர்த்து சோமண்ணா போட்டியிடுவதை வரவேற்கிறேன். சோமண்ணா மட்டும் இல்லை, என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வரவேற்கிறேன். பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறுவதால் வருணா தொகுதியில் நான் தோல்வி அடைந்து விடமாட்டேன்.

வருணா தொகுதியில் சோமண்ணா போட்டியிடுவதற்கான பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. அதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. எனது வெற்றி தோல்வி பற்றி முடிவு எடுக்க வேண்டியது பா.ஜனதா அல்ல. வருணா தொகுதி மக்களே. அவர்கள் என்னை தோற்கடிக்க விட மாட்டார்கள்.

இவவாறு சித்தராமையா கூறினார்.


Next Story