முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தோற்கடிப்பேன்
எனக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் காரணம். அவரது ஊழல்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். விரைவில் அவர் செய்த ஊழல்கள் அனைத்தையும் அம்பலப்படுத்துவேன். சிக்காவி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தோற்கடிப்பேன்.
-நெகரு ஒலேகார், முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜனதா.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கிடைக்கும்
தார்வார் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கொடுப்பது பற்றி மேலிட தலைவர்களுடன் பேசியுள்ளோம். அவருக்கு விரைவில் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜனதா இந்த தேர்தலில் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கொடுப்பது பற்றி எங்களின் கருத்துக்களை மேலிட தலைவர்களிடம் கூறியுள்ளோம்.
- பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரி.
வி.சோமண்ணா எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்பார்
சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த வி.சோமண்ணா, இதுவரை எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. அவர் எந்த முகத்தை வைத்து மக்களிடம் ஓட்டு கேட்பார். எங்கள் கட்சி வளர்ச்சிக்கானது. ஆனால் சோமண்ணாவின் பேச்சு வெறும் பேச்சு. நான் 4-வது முறையாக இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்படுவேன்.
- புட்டரங்கஷெட்டி, காங்கிரஸ் வேட்பாளர்
கனகப்புராவில் வெற்றி பெற்று விருந்து சாப்பிடுவோம்
கனகப்புரா தொகுதியில் டி.கே.சிவக்குமார், காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள் அவர் மீது முற்றிலும் அதிருப்தியில் உள்ளனர். எனவே இந்த தேர்தலில் மக்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்துவிட்டனர். பா.ஜனதா வேட்பாளருக்கு நல்ல மிலிட்டரி ஓட்டலில் விருந்து வைத்து அனுப்புவோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். எங்கள் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று விருந்து சாப்பிடுவோம். இந்த முறை டி.கே.சிவக்குமாரை வீழ்த்தி ஆர்.அசோக் வெற்றி பெறுவார்.
- மந்திரி அஸ்வத் நாராயண்.
ஜனதாதளம்(எஸ்) கட்சி தனித்து ஆட்சிக்கு வராது
ரத்ததானம் செய்யச் சொல்லும் போது சாதி பார்க்காமல், முஸ்லிம் ஆக இருந்தாலும் சரி என பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். ஆனால் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதில் அக்கட்சி தான் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை ஜனதாதளம் (எஸ்) கட்சியிடம் ஆட்சி கொடுத்தோம். அப்போது குமாரசாமி முதல்-மந்திரியாகவும், ஜி.டி.தேவேகவுடா கல்வித்துறை மந்திரியாகவும் இருந்தனர். அவர்கள் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில் ஜி.டி.தேவேகவுடா என்னிடம் வந்து காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்தார். அவரே வந்தார். அவரே சென்றார். இப்போது அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனதாதளம் (எஸ்) கட்சி எத்தனை யாத்திரை நடத்தினாலும் தனித்து ஆட்சிக்கு வர முடியாது.
- சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர்.