10 நாளில் இறப்பேன்... 3வது நாளில் உயிர்த்தெழுவேன்- பாதிரியார் புலம்பல்


10 நாளில் இறப்பேன்... 3வது நாளில் உயிர்த்தெழுவேன்- பாதிரியார் புலம்பல்
x

10 நாளில் இறப்பேன்... 3வது நாளில் உயிர்த்தெழுவேன் என பாதிரியார் ஒருவர் கூறி வருவதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் கண்ணவரம் அருகே கொல்லனபள்ளி சர்ச்சில் பாதிரியார் ஒருவர் திடீரென்று, நான் 10 நாளில் இறந்து விடுவேன், பின்னர் 3வது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று பேசத் தொடங்கியுள்ளார்.

அத்துடன், தனக்கு சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில், அவர் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினர், செய்வதறியாது தவிக்கின்றனர். ஆனாலும் பாதிரியாரோ "இன்னும் 10 நாளில் இறந்து, அடுத்த 3வது நாளில் நான் உயிர்த்தெழுவேன்" என்று விடாப்பிடியாக கூறி வருகிறார்.

இந்த நவீன யுகத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கை உள்ளதா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.


Next Story