"தமிழ்நாட்டு பெண்கள் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன்" - குஷ்பு பேட்டி
டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, குஷ்பு பதவியேற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன் என குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, குஷ்பு பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உலகளவில் இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, தன்னால் முடிந்ததை செய்வேன் என உறுதி அளித்த அவர், தமிழ்நாட்டு பெண்களின் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story