மணிப்பூர் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக போவது இல்லை: பிரேன் சிங் விளக்கம்


மணிப்பூர் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக போவது இல்லை: பிரேன் சிங் விளக்கம்
x

மணிப்பூர் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக போவது இல்லை என்று பிரேன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இம்பால்,

மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று முதல் மந்திரி பிரேன் சிங் பதவி விலக போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எதிர்க்கட்சிகள் பதவி விலக வேண்டும் எனக் கூறி வந்த நிலையில், இன்று பிற்பகல் கவர்னரை பிரேன் சிங் சந்தித்தார். இதனால், அவர் பதவி விலகலாம் என தகவல் பரவியது

பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், முதல் மந்திரி பதவியில் இருந்து விலக போவது இல்லை என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சுமர் இரண்டு மாதங்களக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story