இனி எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை - யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டம்


இனி எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை - யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டம்
x

நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை. நான் சுதந்திராமாக இருக்கப் போகிறேன் என யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா தோல்வியைத் தழுவினார்.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக, மார்ச் 2021-ல் திரிணாமூல் ககாங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதற்கு முன்பு அவர் 2018 வரை பா.ஜ.க-வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், ``

நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை. நான் சுதந்திராமாக இருக்கப் போகிறேன் என யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

. இப்போது எனக்கு 84 வயதாகிறது. எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பேன் என்பதை நான் பார்க்க வேண்டும். பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை'' என்றார்.


Next Story