எங்கள் அப்பாவிற்கு எதாவது நடந்தால்... யாரையும் விட்டு வைக்க மாட்டேன் - லாலு பிரசாத்தின் மகள் எச்சரிக்கை


எங்கள் அப்பாவிற்கு எதாவது நடந்தால்... யாரையும் விட்டு வைக்க மாட்டேன் - லாலு பிரசாத்தின் மகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 March 2023 9:42 AM IST (Updated: 8 March 2023 9:54 AM IST)
t-max-icont-min-icon

மிசா பாரதி இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிற லாலு பிரசாத் யாதவை விசாரிக்கவும் சி.பி.ஐ. முடிவு செய்தது.

பாட்னா,

ரெயில்வேயில் வேலை வழங்கிவிட்டு லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, நாடு திரும்பி, டெல்லியில் இந்தியா கேட் அருகில் உள்ள பண்டாரா பார்க்கில் அமைந்துள்ள மகள் மிசா பாரதி இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிற லாலு பிரசாத் யாதவை விசாரிக்கவும் சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக நேற்று காலை 10.40 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 கார்களில் அங்கு சென்றனர்.

எறத்தாழ 2 மணி நேரம் லாலு பிரசாத் யாதவிடம் சில ஆவணங்களைக் காட்டி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து 12.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றனர். லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி தனது டுவிட்டர் பக்கத்தில், 'எங்க அப்பாவை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறீர்கள். இது சரியல்ல. இதனால் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். டெல்லி நாற்காலியை அசைப்போம். இதெல்லாம் நினைவில் இருக்கும். நேரம் சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோகிணி, தன் தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளித்து புது வாழ்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story