தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்...!


தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்...!
x

ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். அவருக்கு அடுத்து தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார்.

இந் நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. மேலும் இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் 1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார். அண்மையில் விஆர்எஸ் பெற்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 2 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டே நாடே எதிர்பாக்கும் மக்களவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அருண் கோயலின் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.


Next Story