லேசான காய்ச்சலுக்கு 'ஆன்டிபயாடிக்' மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்


லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
x

லேசான காய்ச்சலுக்கு ‘ஆன்டிபயாடிக்’ மருந்தினை தரக்கூடாது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

'ஆன்டிபயாட்டிக்' என்று அழைக்கப்படுகிற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

* லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து தருவதை தவிர்க்க வேண்டும்.

* பொதுவாக ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை, பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் அதிதீவிர நிலை, சமூக அளவிலான நிமோனியா, நிமோனியா பாதித்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் தர பரிந்துரைக்கப்படுகிறது. எனவே ஆன்டிபயாடிக் சிகிச்சையை விவேகத்துடன் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story