பிரதமர் பதவிக்கு வலிமையான வேட்பாளர் நிதிஷ்குமார் தான்: தேஜஸ்வி யாதவ்
பிரதமர் பதவிக்கு வலிமையான வேட்பாளராக நிதிஷ் குமார் இருப்பார் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் உள்ளனர். இந்த நிலையில், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவரிடம், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படுவதாக பேசப்படுவது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், " இதற்கு நிதிஷ்குமார் தான் பதில் கூற வேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் நான் எதுவும் பேச முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், நிதிஷ்குமார் நிச்சயமாக வலிமையான வேட்பாளராக இருப்பார்" என்றார்.
Related Tags :
Next Story