குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி


குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி
x
தினத்தந்தி 15 July 2022 11:18 AM GMT (Updated: 15 July 2022 12:45 PM GMT)

குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி

நாட்டில் குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஏன் காலை 9 மணிக்கு தொடங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி லலித் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி லலித் தலையிலான அமர்வின் விசாரணை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.விசாரணையின் போது பேசிய நீதிபதி லலித், சுப்ரீம் கோர்ட்டில் காலை 9 மணிக்கு விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஏன் 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வரக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வழக்கமாக காலை 10.30 மணிக்கு கூடும் சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு மணி நேரம் முன்னதாக 9.30 மணிக்கு கூடியது.


Next Story