தார்வாரில் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்


தார்வாரில் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
x

தார்வாரில் ஐ.ஐ.டி நிறுவன கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

தார்வார்:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி 12-ந் தேதி (நாளை) கர்நாடகம் வருகிறார். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை அவர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தார்வாரில் நடைபெறும் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடம், ஜல்ஜீவன் திட்டம், ஜெயதேவா ஆஸ்பத்திரி ஆகியவற்றை மோடி திறந்து வைக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு அதிகளவில் திட்டங்களை வழங்கியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை, ரெயில்வே திட்டங்கள், துறைமுகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளார். இதுவரை பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்திற்கு படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டது. இது நமது பெருமைமிகு நிறுவனம். இதை நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சாகர்மாலா திட்டத்தின் கீழ் பிலிகேரி துறைமுகம் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Related Tags :
Next Story