சைவம் சாப்பிட தனி மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம்- ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


சைவம் சாப்பிட தனி மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம்- ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

சைவம் சாப்பிட தனி மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் உள்ள பவாய் ஐ.ஐ.டி. விடுதியில் சமீபத்தில் சைவ மாணவர்கள் மட்டும் உட்கார வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை அடுத்து அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.

இதை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதுகுறித்து அம்பேத்கேர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்ட தகவலில்:- ஐ.ஐ.டி. பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது என கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

1 More update

Next Story