கான்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை


கான்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை
x

கான்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சனிகவான் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதி கார்யா(வயது 28). இவர் கான்பூர் ஐ.ஐ.டி.யில் எர்த் சயின்ஸஸ் துறையில் பி.எச்.டி. பட்டம் பெறுவதற்காக, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், பிரகதி கார்யா தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் அங்கு வந்து பிரகதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது அறையில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அதில் தனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல என்று பிரகதி எழுதியிருப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி.யில் இந்த ஆண்டு நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story