மோகன் பகவத்தை தேசத் தந்தை என புகழ்ந்த இஸ்லாமிய தலைவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு


மோகன் பகவத்தை தேசத் தந்தை என புகழ்ந்த  இஸ்லாமிய  தலைவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
x

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை தேசத்தந்தை என்று அகில இந்திய இமாம்களின் அமைப்பு தலைவரான உமர் அகமது இல்யாசி தெரிவித்து இருந்தார்.

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை தேசத் தந்தை என அகில இந்திய இமாம்களின் அமைப்பு தலைவர் உமர் அகமது இல்யாசி புகழ்ந்து பேசினார். இல்யாசியின் இந்த பேச்சை அடுத்து அவருக்கு அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இமாம் தலைவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இமாம் இல்யாசி கூறுகையில், " இந்திய அரசுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த அச்சுறுத்தல்களுக்கும் நான் பயப்பட மாட்டேன். இங்கிலாந்தில் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல்களுக்கு எதிராக புகார் கொடுத்து 3 எப்.ஐ.ஆர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா செழிப்படவதை பார்க்க சகிக்காத தேச விரோத சக்திகள்தான் இத்தகைய மிரட்டல்களை விடுக்கின்றனர்" என்றார்.


Next Story