கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்


கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்
x

Image Courtesy :ANI 

கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைதானத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறியுள்ளதாவது :

வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம். டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது.

கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஜூன் 4 முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. 44 முதல் 47 டிகிரி வரை செல்சியஸ் மாறுபடுகிறது. இன்னும் 4 நாட்களுக்கு இது தொடரும். வெயில் மிகக் கடுமையாக இருப்பதால், மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story