இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் - சர்வதேச நிதியம் கணிப்பு


இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் - சர்வதேச நிதியம் கணிப்பு
x

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1 % ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1% ஆக இருக்கும் எனவும் 2022-ல் 6.8.% ஆக கணிக்கப்பட்ட நிலையில் 2024-ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

"இந்தியாவின் வளர்ச்சியானது 2022ல் 6.8 சதவீதத்தில் இருந்து 2023ல் 6.1 சதவீதமாக குறையும் மீண்டும் 2024ல் 6.8 சதவீதமாக உயரும் என கூறப்பட்டுள்ளது.

உலகளவில் ஏற்படும் பொருளாதார சுணக்க நிலையை கருத்தில்கொண்டு வரும் 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story